உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உங்களைத் தேடி திட்டம் துவக்கம்

உங்களைத் தேடி திட்டம் துவக்கம்

திருமங்கலம்: 'உங்களைத் தேடி' வேளாண்மை கிராமப்புற பிரசாரம் என்ற திட்டத்தை நேற்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.கள்ளிக்குடி ஒன்றியம் ஓடைப்பட்டி, திருமங்கலம் ஒன்றியம் சவுடார்பட்டியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எம்.பி., மாணிக்க தாகூர் திட்டம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.எம்.பி., பேசுகையில், ''தமிழ் மொழியில் இருந்து கன்னட மொழி வந்ததாக நடிகர் கமலஹாசன் கூறியுள்ளார். மொழி குறித்து வரலாற்று அறிஞர்கள் பேச வேண்டிய பேச்சு, நடிகர்கள் இதை பேசுவது தேவையற்றது. வெறுப்பு அரசியல் செய்பவர்கள் இந்த பிரச்னையை பெரிதுபடுத்தி விடக்கூடாது'' என்றார்.வேளாண் உதவி இயக்குனர் சந்திரகலா, வேளாண் அலுவலர் கீதா, செயற்பொறியாளர் விவேகானந்தன், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை