உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை -- தேனி ரோட்டில் மறியல் 

மதுரை -- தேனி ரோட்டில் மறியல் 

மதுரை: சாக்கடை அடைப்புக்கு தீர்வு வழங்காத மாநகராட்சியை கண்டித்து திருமலை காலனி மக்கள் மதுரை -- தேனி ரோட்டில் மறியல் செய்ததால் போக்குவரத்து பாதித்தது. பா.ஜ., மாநில ஊடகப் பொறுப்பாளர் ராஜ்குமார் கூறியதாவது: திருமலை காலனியில் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. ஆசாரிப் பேட்டை, பாரதி நகர் பகுதிகளில் பாதாள சாக்கடை நிரம்பி வீட்டுக்குள் வருகிறது. இதன் தாக்கத்தால் திருமலை காலனியில் 10 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்து விட்டது. மாநகராட்சி அதிகாரிகளிடம் புகாரளித்தும் கண்டுகொள்ளவில்லை. தனியார் ஓட்டல்கள் புகார் செய்தால் உடனே சரி செய்கின்றனர். மாநகராட்சி வரி வாங்குவதைத் தவிர எதுவும் செய்வதில்லை. இங்கு பிள்ளைமார் சங்க பள்ளி முன் மட்டும் பத்து குப்பைத் தொட்டிகள் உள்ளன. இதனாலும் மாணவர்கள் நேரடியாக பாதிக்கின்றனர் என்றார். எஸ்.எஸ்.காலனி இன்ஸ்பெக்டர் மோகன், உதவிப்பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் மக்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி