மேலும் செய்திகள்
சீர்மரபினர் உறுப்பினர் பதிவை புதுப்பிக்கலாம்
30-Apr-2025
மதுரை : 'ஜாதி சான்றிதழ் வழங்கவில்லை என்றால் முதல்வர் ஸ்டாலின் மதுரை வரும் வழியில் போராட்டம் நடத்துவோம்' என, சீர்மரபினர் நலசங்கத்தினர் தெரிவித்தனர். மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த பொதுமக்கள் குறை கேட்பு முகாமில் சீர்மரபினர் நலச்சங்க பொருளாளர் ஜெயராமன் தலைமையில் ஜாதி சான்றிதழ் கேட்டு மனு கொடுத்தனர்.மாநில மகளிர் அணி தலைவி தவமணி தேவி கூறியதாவது: குற்ற பரம்பரை சட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு டி.என்.டி., ஜாதி சான்றிதழ் வழங்குமாறு பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம். 69 சதவீதத்தை தாண்ட முடியாது என, தெரிவிக்கின்றனர்.மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள, 68 சமூகங்களுக்கு டி.என்.டி., பிரிவின் கீழ் ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும். மதுரை வரவுள்ள முதல்வர் ஸ்டாலின் இக்கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில், மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சீர்மரபினர் முதல்வர் ஸ்டாலின் வரும் வழியில் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
30-Apr-2025