ரூ.129 கோடிக்கு கடனுதவி வழங்கல்
மதுரை: மதுரை யாதவா பெண்கள் கலைக்கல்லுாரியில் கலெக்டர் சங்கீதா தலைமையில் வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் மகளிர் சுயஉதவி குழுவிழா கொண்டாட்டம் நடந்தது.இதில் 1113 மகளிர் சுய உதவிக் குழுக்களை சார்ந்த பயனாளிகளுக்கு ரூ.66 கோடி 63 லட்சம், நகர்ப்புற பகுதியில் 588 மகளிர் குழுக்களுக்கு ரூ.62 கோடி, வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பாக 15 சுய உதவி குழுக்களைச் சார்ந்த பயனாளிகளுக்கு ரூ.36 லட்சத்து 53 ஆயிரமுமாக மொத்தம் 1716 சுய உதவி குழுக்களுக்கு ரூ.129 கோடி கடனுதவி அமைச்சரால் வழங்கப்பட்டது. மாநகராட்சி மேயர் இந்திராணி எம்.எல்.ஏ., க்கள் தளபதி, பூமிநாதன், அரசு அதிகாரிகள், மகளிர் சங்க உதவி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.