உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / துணை முதல்வர் வழங்கிய பட்டாவுக்கு எண் இல்லை தவிப்பில் பொதுமக்கள்

துணை முதல்வர் வழங்கிய பட்டாவுக்கு எண் இல்லை தவிப்பில் பொதுமக்கள்

சோழவந்தான்: சோழவந்தான் வட்டார கிராமங்களில் துணைமுதல்வர் உதயநிதியால் நம்பர் இல்லாத இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள இரும்பாடி, கருப்பட்டி, நாச்சிகுளம் உள்பட பல கிராமங்களில் ஓராண்டுக்கு முன் பலருக்கு உதயநிதியால் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. இதில் மனையின் உரிமையாளர், அளவு உள்ளிட்ட விவரங்கள் மட்டுமே குறிக்கப்பட்டு, பட்டா எண் இல்லாமல் வழங்கப்பட்டுள்ளது. இதனால் உரிமையாளர் உயிரிழந்தால் அவரது வாரிசுகளுக்கு பட்டாவை மாற்றுவதில் சிரமம் ஏற்படும். மேலும் புதிதாக வீடு கட்ட வங்கிக் கடனுக்கு விண்ணப்பிப்பதிலும் சிக்கல் நிலவுகிறது. ஆன்லைனில் பட்டா எண் இல்லாமல் டவுன்லோடு செய்ய முடிவதில்லை. வி.ஏ.ஓ., விடம் நகல் கேட்டால் தர மறுக்கின்றனர். துணைத் தாசில்தார் செந்தில்குமாரிடம் கேட்டபோது, ''அனைத்து கிராமங்களில் இருந்தும் நம்பர் இல்லாத பட்டாக்களின் விவரங்கள் பெறப்பட்டுள்ளன. ஆர்.டி.ஓ., வின் அனுமதிக்காக சமர்ப்பிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் எண் வழங்கப்படும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ