உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / எரியாத விளக்குகளால் பொது மக்கள் அவதி

எரியாத விளக்குகளால் பொது மக்கள் அவதி

அலங்காநல்லுார்: மதுரை மேற்கு ஒன்றியம் சிறுவாலை ஊராட்சி செல்லுன கவுண்டன்பட்டியில் தெரு மின் விளக்குகள் எரியாததால் இரவு நேரத்தில் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். இக்கிராமத்தில் 80க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. தெருக்களில் உள்ள மின் விளக்குகள் சில வாரங்களாக எரியாமல் உள்ளன. வயல்வெளி, பாசன வாய்க்கால்கள் நடுவே கிராமம் அமைந்துள்ளது. இரவு நேரங்களில் தெருக்களில் தேள், பாம்பு போன்ற விஷப்பூச்சிகள் நடமாடுகின்றன. விளக்குகள் எரியாமல் இருட்டாக உள்ளதால் இரவு நேரங்களில் கிராமத்தினர் அச்சத்துடன் வெளியே செல்லும் நிலை உள்ளது. மின் ஒயர்களின் மீது மரங்கள் உரசுவதால் அடிக்கடி மின் வினியோகம் தடைபடுவதாக தெரிவிக்கின்றனர் இப்பகுதி விமலா கூறுகையில்,: வடக்கு தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஒயர்களில் மரக்கிளைகள் உரசுகின்றன. லேசான காற்று வீசினாலும் ஒயர்கள் உரசி தீப்பொறி பறக்கிறது. மின் விநியோகமும் தடைபடுகிறது. இது குறித்து பலமுறை புகார் அளித்தும் மின்வாரியத்தினர் நடவடிக்கை இல்லை. தெரு விளக்குகள் எரியாததால் பல்வேறு சிரமங்களை சந்திக்கிறோம். ஊராட்சி நிர்வாகம் மற்றும் மின் வாரியத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி