டேக்வாண்டோ போட்டிக்கு தகுதி
உசிலம்பட்டி : மதுரை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டிகள் ஜெயராஜ் அன்னபாக்கியம் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. உசிலம்பட்டி டி.ராமநாதபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். 14 வயது மாணவர்கள் 18 -21 கிலோ எடை பிரிவில் ஆகாஷ், 21-23 கிலோ பிரிவில் சரவணப்பெருமாள், 29-32 கிலோ எடைபிரிவில் சந்தோஷ்பாண்டி முதலிடம் பெற்றனர்.23-25 கிலோ எடைபிரிவில் ரோகித்ராஜ் 27-29 எடைபிரிவில் சரண்பிரசாத் மூன்றாமிடம் பெற்றனர். 14 வயது மாணவியர் 35-38 கிலோ எடைபிரிவில் ருதிஸ்கா, 24-26 கிலோ எடைபிரிவில் அஜந்தா ஆகியோர் முதலிடம் பெற்றனர்.20-22 கிலோ எடைபிரிவில் தனலட்சுமி மூன்றாமிடம் பெற்றார். முதலிடம் பெற்ற 5 பேர்கள் சிவகங்கை மாவட்டத்தில் வரும் ஜன., மாதம் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை தலைமை ஆசிரியர் அய்யர்சாமி, உடற்கல்வி ஆசிரியர்கள் யுவராஜா, பாண்டி உட்பட பலரும் பாராட்டினர்.