உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தரத்தில் தரமில்லை: மதுரையில் ஆவின் பால் உற்பத்தியாளர்கள் குற்றச்சாட்டு: தரக்கட்டுப்பாட்டு பிரிவு நடவடிக்கையால் நஷ்டம்

தரத்தில் தரமில்லை: மதுரையில் ஆவின் பால் உற்பத்தியாளர்கள் குற்றச்சாட்டு: தரக்கட்டுப்பாட்டு பிரிவு நடவடிக்கையால் நஷ்டம்

மதுரை: மதுரை ஆவினில் உற்பத்தியாளர்கள் வழங்கும் பாலில் பி.எம்.சி., (மொத்த பால் குளிர்விப்பு மையம்) - மைய அலுவலகத்தில் மேற்கொள்ளப்படும் தரக்கட்டுப்பாட்டில் வித்தியாசம் ஏற்படுவதால் லிட்டருக்கு ரூ.2 வரை நஷ்டம் ஏற்படுவதாக உற்பத்தியாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.மாவட்டத்தில் 700க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்கம் மூலம் நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் உற்பத்தியாளர்கள் ஆவினுக்கு பால் வழங்குகின்றனர். 50 பி.எம்.சி.,கள் மூலம் நாள் ஒன்றுக்கு 1.70 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. உற்பத்தியாளர்கள் அந்தந்த பி.எம்.சி.,களுக்கு வழங்கி, அங்கிருந்து 20 'ரூட்'களில் டேங்கர்கள் மூலம் ஆவின் மைய அலுவலகத்திற்கு தினமும் பால் கொண்டு வரப்படுகிறது.பி.எம்.சி.,யில் பால் வழங்கும்போது அங்கு 'மில்க் அனலைசர்' மூலம் எடை, தரம் பரிசோதிக்கப்படுகிறது. டேங்கர் மூலம் ஆவினுக்கு கொண்டுசென்ற பின் அங்கும் தரக்கட்டுப்பாட்டு பிரிவினர் பரிசோதிக்கின்றனர். இதில் பெரும்பாலும் 2 பாயின்ட்கள் குறைவாக மதிப்பிடப்படுவதால் லிட்டருக்கு ரூ.2 வரை நஷ்டம் ஏற்படுவதாக உற்பத்தியாளர்கள் கொந்தளிக்கின்றனர். இதற்கு காரணம் தரக்கட்டுப்பாட்டு பிரிவினர் பாரபட்சத்துடன் பாலின் தரத்தை மதிப்பீடு செய்வதாக சர்ச்சை எழுந்துள்ளது.இப்பிரச்னை குறித்து பி.எம்.சி., செயலாளர்களும் தொடர்ந்து அதிருப்தி தெரிவித்தனர். இதையடுத்து மதுரை ஆவின் அலுவலகத்தில் துணைப் பதிவாளர் (பால் வளம்) சுரேஷ் தலைமையில் பி.எம்.சி., செயலாளர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடந்தது. அதில் தரக்கட்டுப்பாட்டு பிரிவு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் வெண்மணிசந்திரன் கூறியதாவது: நீதிமன்றம் உத்தரவுப்படி பி.எம்.சி.,யில் ஆவின் தரக்கட்டுப்பாட்டு அலுவலர்கள் சார்பில் 'ஸ்பாட் டெஸ்ட்' எடுக்க வேண்டும். பால் அளவு, தரம் பரிசோதித்து, கொழுப்பு, இதர சத்துக்கு ஏற்ப விலை நிர்ணயிக்கப்பட்டது. இந்த நடைமுறை சில மாதங்கள் அமலில் இருந்தது. அப்போது உற்பத்தியாளர்களுக்கு ரூ.3 வரை விலை அதிகம் கிடைத்தது. ஆனால் தற்போது மைய அலுவலகத்தில் பால் எடை, தரம் பரிசோதிக்கப்படுகிறது. இதில் பெரும்பாலான உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. மீண்டும் 'ஸ்பாட் டெஸ்ட்' நடைமுறை கொண்டுவர வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Sivagiri
ஜூலை 10, 2025 17:14

விஞ்ஞான ஊழல் ஸ்பெஷலிஸ்டுகள் . .. யாரு ? திருட்டு மாடல் கும்பல்தான் . . . மதுரை சுற்றுவட்டாரங்களில் பெரும்பாலும் , தேதி முடியும் நேரத்தில் உள்ள பாக்கெட்டுகள்தான் கிடைக்கிறதாம் . . பால் / டீ புளிக்கிறதாம் . . . கேட்டால் காலை எட்டு மணிக்குத்தான்கேள்வியெல்லாம் கேட்க முடியாது . . .


சமீபத்திய செய்தி