உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பார்சலில் 240 கிலோ குட்கா; ரயில்வே போலீசார் பறிமுதல்

பார்சலில் 240 கிலோ குட்கா; ரயில்வே போலீசார் பறிமுதல்

மதுரை; மதுரை ரயில்வே ஸ்டேஷனிற்கு பார்சலில் வந்த 240 கிலோ குட்காவை ரயில்வே போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர்.பெங்களூருவில் இருந்து மதுரைக்கு மைசூரு - துாத்துக்குடி ரயிலில், அசோக் என்பவர் அனுப்பியதாக 4 பார்சல்கள் வந்தன. முன்பதிவு பெட்டியில் பெற்றுக்கொள்பவர் பெயர் ஏதும் இல்லாமல் பார்சல்கள் கிடந்தன.காலையில் 2வது பிளாட்பாரத்தில் ரயில் வந்ததும் பார்சல் ஊழியர்கள் அதனை கைப்பற்றி ரயில்வே போலீசாருக்கு தெரிவித்தனர்.போலீசார் அவற்றை சோதனையிட்டதில் ரூ. ஒரு லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள 240 கிலோ குட்கா இருந்தது தெரிந்தது. பார்சலை உரிமை கோரயாரும் வராத நிலையில் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை