உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  ரயில்வே ஸ்டேஷன்கள் புதுமை பெறுகின்றன: சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார் பொது மேலாளர்

 ரயில்வே ஸ்டேஷன்கள் புதுமை பெறுகின்றன: சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார் பொது மேலாளர்

மதுரை: மதுரைக் கோட்டத்திற்கு உட்பட்ட ரயில்வே ஸ்டேஷன் சீரமைப்பு பணிகளை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் நேற்று ஆய்வு செய்தார். மதுரைக் கோட்டத்தில் திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி உள்ளிட்ட முக்கிய ஸ்டேஷன்களில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. திருநெல்வேலியில் ரூ.92.8 கோடியில் புதிய கட்டடங்கள், லிப்ட், எஸ்கலேட்டர் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. ரயில்களை தாமதமின்றி இயக்க கூடுதலாக 6வது நடைமேடை அமைக்கும் பணி நடக்கிறது. 60 சதவீத பணிகள் நிறைவு பெற்று உள்ளன. 2026 பிப்ரவரியில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. விருதுநகரில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.30.55 கோடியில் சீரமைப்பு பணிகள் நடக்கின்றன. 94 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் 2026 மார்ச்சில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. மதுரையில் பல்லடுக்கு பார்க்கிங் மதுரையில் ரூ.347.47 கோடியில் கிழக்கு, மேற்கு டெர்மினல்கள், நடை மேடைகளை இணைக்கும் வகையில் 42 மீ., அகல மேம்பாலம், பார்சல் போக்குவரத்திற்கு பிரத்யேக மேம்பாலம், பெரியார் பஸ் ஸ்டாண்டுடன் ஸ்டேஷனை இணைக்கும் சுரங்கப்பாதை உள்ளிட்ட பணிகள் நடக்கின்றன. கிழக்கு நுழைவு வாயிலின் வடக்கில் புதிய பல்லடுக்கு கார் பார்க்கிங் அமைக்கும் பணி நடக்கிறது. 2026 நவம்பரில் பயணிகள் பயன் பாட்டிற்கு வரும். திண்டுக்கலில் ரூ.22.71 கோடியில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகள், 2026 மே மாதம் நிறைவுற்று பயன் பாட்டுக்கு வருகிறது. இவற்றை ஆய்வு செய்ய தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் நேற்று திருநெல்வேலி வந்தார். அங்கு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டவர், பிரத்யேக ஆய்வு ரயிலில் புறப்பட்டு திருச்சி வரை வேக சோதனை நடத்தினார். கட்டுமான பிரிவு முதன்மை நிர்வாக அதிகாரி சுசில் குமார் மவுரியா, முதன்மை பொறியாளர் சஞ்சய் பிரசாத் சிங், துணை முதன்மை பொறியாளர் ஞானசேகர், மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா, ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் சென்ஞையா உட்பட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ