உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மழையால் மக்காச்சோள அறுவடை பாதிப்பு

மழையால் மக்காச்சோள அறுவடை பாதிப்பு

பேரையூர்: பேரையூர் பகுதியில் அக்டோபர் மாதத்தில் பயிரிடப்பட்ட மக்காச்சோள பயிர்கள் படைப்புழுக்களால் பாதிக்கப்பட்டு தற்போது அறுவடைக்கு தயாராகி உள்ளன. இப்பகுதியில் 30 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மக்காச்சோளம் பயிரிடப்பட்டது. விளைந்த மக்காச்சோள கதிர்கள் படைப்புழு தாக்குதலால் 60 சதவீதத்துக்கு மேல் பாதித்து, மகசூல் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.ஒரு சில விவசாயிகள் மக்காச்சோளம் கதிர்களை அறுவடை செய்யாமல் விட்டுவிட்டனர். பல விவசாயிகள் அறுவடை செய்ய இருந்த நிலையில் 2 நாட்களாக பெய்து வரும் மழையால் அறுவடை பாதிப்பு அடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும் ஈரமாக உள்ள மக்காச்சோளம் அறுவடை செய்தால் காய வைப்பதற்கு போதிய வசதி இல்லாததால் விவசாயிகள் தடுமாறி வருகின்றனர்.விவசாயிகள் கூறியதாவது: பருவமழை தாமதமாக துவங்கியதால் நடவு சமயத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து படைப்புழு தாக்குதல் காரணமாக பெரும்பாலான பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டது. பல்வேறு சிக்கலுக்கு மத்தியில் மக்காச்சோளம் கதிர் பிடித்து அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், குளிர் காலத்தில் தொடர்ந்து 2 நாட்கள் மழை பெய்ததால் அறுவடை செய்ய முடியவில்லை.இதனால் மக்காச்சோள கதிர்களுக்குள் மழை நீர் இறங்கி முளைவிட துவங்கிவிடும். ஒரு சில பகுதிகளில் அறுவடை செய்த மக்காச்சோளத்தை காய வைக்க முடியாமல் மழையில் நனைந்து பயனில்லாமல் போய்விடும். மாடுகளுக்கு தீவனத்துக்கு கூட பயன்படாத அளவுக்கு தட்டைகளும் நனைந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நடப்பாண்டு மக்காச்சோளம் சாகுபடி முழுவதும் வீணாகியதால் வேதனை அடைந்துள்ளோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை