உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / காவனுார் ரோட்டில் தேங்கும் மழைநீர்

காவனுார் ரோட்டில் தேங்கும் மழைநீர்

அலங்காநல்லுார்: மதுரை மேற்கு ஒன்றியம் காவனுாரில் ரோட்டில் தேங்கும் மழைநீரால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இக்கிராம மந்தையில் முத்தாலம்மன் கோயிலைச் சுற்றி 2 ஆண்டுகளுக்கு முன் 'பேவர் பிளாக்' கற்கள் பதித்தனர். தார் ரோடு பகுதியிலும் கற்கள் பதிக்கப்பட்டன. இவ்வழியாக குலமங்கலம், அலங்காநல்லுார், சத்திரப்பட்டிக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. கடந்தாண்டு தார் ரோடு அமைத்த போது ஏற்கனவே அமைத்திருந்த 'பேவர் பிளாக்' கற்களை தவிர்த்து ரோடு அமைத்தனர். இதனால் ரோட்டைவிட 'பேவர் பிளாக்' பகுதி தாழ்வானதாக மாறியது. இதில் தேங்கும் மழை நீர் வெளியேற முடியாமல் நிற்கிறது. சாலை வழுக்குவதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். வாகனங்கள் செல்லும்போது ரோட்டோர வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துவிடுகிறது. கொசு உள்ளிட்ட சுகாதார பாதிப்பு ஏற்படுகிறது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை