மழைநீர் விழிப்புணர்வு
மதுரை: மதுரை காக்கை பாடினியார் மாநகராட்சி பெண்கள் பள்ளியில், மழை நீர் சேகரிப்பின் அவசியம் குறித்து கமிஷனர் கவுரவ்குமார் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அவர் பேசுகையில், 'மழைநீர் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துகிறது. ஆனால் அதன் பெரும்பாலான நீர் கடலிலும், கழிவுநீர் கால்வாய்களிலும் கலந்து வீணாகிறது. பெற்றோரிடம் மழைநீர் சேமிப்பு குறித்து தெரியப்படுத்த வேண்டும். நம் வீட்டின் மாடியில் தேங்கும் மழை நீரை வீணாக்காமல், நிலத்தடியில் சேகரிக்க வேண்டும். இதன்மூலம் சுற்றியுள்ள பகுதியில் பசுமை நிலவும்' என்றார்.