ராமலிங்க சுவாமி குருபூஜை விழா
அலங்காநல்லுார்: அதலை ராமலிங்க சுவாமி சமாதி மடத்தில் குருபூஜை விழா சித்தர்கள் வழிபாட்டுடன் 2 நாட்கள் நடந்தது. பக்தர்கள் அலகு குத்தி, பால்குடம் எடுத்து வந்து அபிஷேகம் செய்தனர். கோயில் மரத்தில் பெண்கள் வேண்டுதல் பொம்மைகள் வைத்தும், தொட்டில் கட்டியும் வழிபட்டனர். சித்தர்கள், அடியார்கள் உணவு சாப்பிட்ட இலையை நேர்த்திக் கடனுக்காக பக்தர்கள் பொதுமக்கள் போட்டி போட்டு எடுத்தனர். நெல் அரிசி, புளி, காய்கறிகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மடத்து நிர்வாகிகள் செய்திருந்தனர்.