உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போலீஸ்காரருக்கு கத்திக்குத்து; ரியல் எஸ்டேட் உரிமையாளர் கைது

போலீஸ்காரருக்கு கத்திக்குத்து; ரியல் எஸ்டேட் உரிமையாளர் கைது

அவனியாபுரம் : மதுரையில் சொந்த ஊர் செல்வதற்காக காத்திருந்த சென்னை போலீஸ்காரர் ராஜ்குமாருக்கு தகராறில் கத்திக்குத்து விழுந்தது. இதில் ரியல் எஸ்டேட் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.விருதுநகர் மாவட்டம் திம்மாபுரத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். சென்னை அமைந்தகரை ஸ்டேஷனில் இரண்டாம் நிலை போலீஸ்காரராக உள்ளார். சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்வதற்காக மதுரை வந்தவர், ரிங் ரோடு மண்டேலா நகர் பஸ் ஸ்டாப்பில் நேற்றுமுன்தினம் இரவு காத்திருந்தார். அப்போது ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் சோளங்குருணி ஆறுமுகம் 39, காருக்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு புறப்பட்டார். இடையூறாக ராஜ்குமாரின் பை இருந்ததால் 'ஹாரன்' அடித்து அதை எடுக்குமாறு ஆறுமுகம் கூறினார். இதுதொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, தகராறில் முடிந்தது. அப்போது கத்தியால் ராஜ்குமாரின் கழுத்து, இடுப்பு பகுதிகளில் குத்தியதாக ஆறுமுகத்தை அவனியாபுரம் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ