கந்த சஷ்டி பாராயணம்
மதுரை: மதுரை ஜெய்ஹிந்த்புரம் தாம்ப்ராஸ் கிளை சார்பில் தைமாத கார்த்திகையையொட்டி சுப்ரமணிய சுவாமியின் பிரீத்தியுடன் ஸ்ரீகந்த சஷ்டி பாராயணம் கிளைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடந்தது. மாநிலமூத்த தலைவர் இல.அமுதன், மாநில துணைப் பொதுச் செயலாளர் பக்தவச்சலம், வைகாசி விசாக கமிட்டி சார்பில் சுப்ரமணியன், கோபாலகிருஷ்ணன், சத்தியமூர்த்தி, முரளி, கணேசன், மகளிர் அணி செயலாளர் ராஜம்மீனாட்சி, ஆலோசகர் கல்யாணி, இளைஞரணி செயலாளர் மீனாட்சிசுந்தரம், மகளிர் அணிஇணைச் செயலாளர் சித்ரா உட்பட பலர் பாராயணம் செய்தனர். கிளை பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.