உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விசாரணைக்கு போலீசார் அழைத்து சென்றதால் உறவினர்கள் மறியல்

விசாரணைக்கு போலீசார் அழைத்து சென்றதால் உறவினர்கள் மறியல்

உசிலம்பட்டி : உசிலம்பட்டி அருகே குஞ்சாம்பட்டியில் கருப்பசாமி என்பவரது தோட்டத்தில் அனுமதி இல்லாமல் வனவிலங்குகளுக்காக மின்வேலி போட்டிருந்தது. 2024 ஆகஸ்டில் மின்வேலியில் சிக்கி தேனி மாவட்டம் பூதிப்புரம் வளையபட்டியைச் சேர்ந்த முருகன் 31, பலியானார். அவரது உடலை அருகில் உள்ள கிணற்றில் துாக்கி போட்டனர். இந்த வழக்கில் கருப்பசாமி, ஹரிபிரகாஷ், ராமச்சந்திரன், கலையரசன், செல்வகணேசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. நேற்று காலை குஞ்சாம்பட்டி சென்ற போலீசார் 5 பேரையும் மீண்டும் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். மாலை 6:00 மணிக்கு விட்டு விடுவோம் என தெரிவித்துச் சென்றனர். மாலை 6:00 மணிக்கு உசிலம்பட்டி தாலுகா போலீஸ் ஸ்டேஷனிற்கு சென்று உறவினர்கள் விசாரித்த போது பதில் இல்லை. விசாரணைக்கு அழைத்து சென்றவர்களை எங்கு வைத்துள்ளீர்கள் எனக் கேட்டு பேரையூர் ரோட்டில் இரவு 9:00மணிக்கு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இன்ஸ்பெக்டர் ஆனந்த் தலைமையிலான போலீசார் அழைத்துச் செல்லப்பட்டவர்களிடம் விசாரணை நடக்கிறது. 5 பேர் மட்டும் வாருங்கள் அவர்களைக் காட்டுகிறோம். விசாரணை முடிந்ததும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமதானம் கூறி அனுப்பினர். மறியலால் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி