சன்மார்க்க கூட்டம்
சோழவந்தான் : சோழவந்தான் ஐயப்பன் கோயிலில் சன்மார்க்க சங்கக் கூட்டம் நடந்தது.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். நாகையா முன்னிலை வகித்தார்.அருள் விளக்கேற்றி அகவல் படிக்கப்பட்டது. வள்ளலாரின் தனித்தன்மையை பற்றி வேங்கடராமன், ராமநாதன் பேசினர். ஜோதி வழிபாடு நடந்தது. நிர்வாகி சாந்தி நன்றி கூறினார். ஜெயக்குமார், ராஜூ குடும்பத்தினர் அன்னதானம் வழங்கினர்.