தினமலர் செய்தியால் தீர்வு
மேலுார்: எட்டிமங்கலத்தில்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு தயார் செய்யும் சமையலறையில் சிலர் நெல் மூடைகளை அடுக்கியிருந்தனர். இதனால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டு அடுப்பு அருகே காஸ் சிலிண்டர் வைத்திருந்தனர். இதனால் தீ விபத்து அபாயம் நிலவியது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்து வெளியானது. அதன் எதிரொலியாக பி.டி.ஓ., சங்கர் கைலாசம் தலைமையில் ஊழியர்கள் நெல் மூடைகளை அகற்றினர்.