உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பட்டுப்போன மரங்கள் அகற்றம்: கோர்ட்டில் தகவல்

பட்டுப்போன மரங்கள் அகற்றம்: கோர்ட்டில் தகவல்

மதுரை: மதுரை சந்திரபோஸ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:மதுரை பீபிகுளம் கேந்திரிய வித்யாலயா பள்ளி அருகே மற்றும் உத்தங்குடி உட்பட நகரின் பல இடங்களில் பட்டுப்போன மரங்கள் உள்ளன. காற்றில் கீழே சாய்ந்தால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இவற்றை அகற்றக்கோரி மாநகராட்சிக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது.மாநகராட்சி தரப்பு: 10 நாட்களில் அகற்றப்படும். இவ்வாறு தெரிவித்தது.நீதிபதிகள்: அகற்றியது குறித்து டிச.9 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை