உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மேம்பால விளம்பர போஸ்டர்கள் அகற்றம்

மேம்பால விளம்பர போஸ்டர்கள் அகற்றம்

மதுரை: மதுரை காளவாசல் பகுதி மேம்பாலத்தில் அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு இயக்கங்கள் சார்பில் போஸ்டர்கள், பேனர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகளுக்கு கவனச் சிதறல் ஏற்பட்டதால் விபத்துகளுக்கு வழிவகுத்தது.உயர்நீதி மன்ற உத்தரவை மீறி அமைத்துள்ள விளம்பர பேனர்கள், போஸ்டர்களை அப்புறப்படுத்த வேண்டும் என கலெக்டர் சங்கீதாவுக்கு, சமூகஆர்வலர் முத்துக்குமார் புகார் அனுப்பினார். இதையடுத்து திலகர் திடல் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தங்கமணி, நெடுஞ்சாலை, மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து மேம்பாலத்தின் ஒட்டியிருந்த போஸ்டர்கள், பிளக்ஸ் பேனர்களை அகற்றினர். செஞ்சிலுவை சங்க செயலாளர் ராஜ்குமார், சமூகஆர்வலர்கள் அறிவழகன், சிலம்பரசன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி