சோழவந்தானில் கம்பங்கள் அகற்றம்
சோழவந்தான்:பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த கட்சி, அமைப்புகளின் கொடிக்கம்பங்கள் சோழவந்தான் பேரூராட்சி சார்பில் அகற்றப்பட்டன.பொது இடங்கள், ரோட்டோரம் உள்ள கொடிக்கம்பங்களை அகற்ற உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது. அதை நிறைவேற்றும் வகையில் சோழவந்தான் பேரூராட்சி சார்பில் ஒரு மாதத்திற்கு முன்பே கொடிக்கம்பங்களை தாங்களாகவே அகற்றி கொள்ற அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகளுக்கும் அறிவிப்பு செய்து அவகாசம் கொடுக்கப்பட்டது. அதன்பின்னும் அகற்றப்படாத கொடிக்கம்பங்களை பேரூராட்சி அதிகாரிகளின் உத்தரவின் பேரில் ஊழியர்கள் அகற்றினர்.