மீண்டும் மீண்டும் ஆக்கிரமிப்பு
மேலுார்: மேலுாரில் புதிய காய்கறி சந்தைக்கு செல்லும் வழியில் காய்கறி கடைகள் அமைத்து ஆக்கிரமித்துள்ளதாக நகராட்சிக்கு புகார்கள் வந்தன.நகராட்சி தலைவர் முகமது யாசின், சுகாதார, நகரமைப்பு ஆய்வாளர்கள் தினேஷ்குமார், சரவணகுமார் உள்ளிட்டோர் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பை அகற்றினர்.அதிகாரிகள் சென்ற சிறிது நேரத்தில் மீண்டும் கடைகள் அமைக்கப்பட்டன. அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை தடுக்க வேண்டும்.