அரசு பள்ளியாக மாற்ற கோரிக்கை
மதுரை : மதுரை பாலமந்திரம் மேல்நிலை, துவக்கப் பள்ளிகளை அரசு பள்ளியாக மாற்ற வேண்டும் என அமைச்சர் மூர்த்தியிடம் பள்ளி நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர்.விஸ்வநாதபுரத்தில் இப்பள்ளி வளாகத்தில் புதிய கட்டடத்தை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார்.கலெக்டரை கவுரவத் தலைவராகவும், மேயரை துணைத் தலைவராகவும் கொண்டு அரசு உதவி பெறும் பள்ளியாக இயங்கி வருகிறது.இப்பள்ளியில் தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனம் சார்பில் ரூ.1.17 கோடி மதிப்பில் 6 வகுப்பறைகள் கொண்ட கட்டடம் கட்டப்பட்டது.டி.வி.எஸ்., குழுமத்தின் தத்தாத்ரேயா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் சார்பில் ரூ.13 லட்சத்தில் கழிப்பறையும், சுந்தரம் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் சார்பில் ரூ.12 லட்சத்தில் மேஜை, இருக்கைகள் வழங்கப்பட்டன. இப்பள்ளியை அரசு பள்ளியாக மாற்ற பள்ளி கல்வி இயக்குநருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாவும், விரைவில் அரசு ஆணை பெற்றுத் தருமாறும் பள்ளி நிர்வாகிகள்அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர்.கலெக்டர் சங்கீதா, மேயர் இந்திராணி, ஆர்.டி.ஓ., ஷாலினி, பள்ளி செயலாளர் சோமசுந்தரம், பொருளாளர் சீனிவாசன் கலந்து கொண்டனர்.