ஜி.எஸ்.டி., கமிஷனரிடம் கோரிக்கை
மதுரை; பல்வேறு உணவுப் பொருட்களுக்கான ஜி.எஸ்.டி., வரியை குறைக்க வேண்டுமென தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம் சார்பில் மத்திய ஜி.எஸ்.டி. கமிஷனர் மதன் மோகன் சிங்கிடம் கோரிக்கை வைத்தனர். சங்க நிர்வாகிகள் ஜெயப்பிரகாசம், வேல்சங்கர், விஜயன், கார்த்திகேயன், நுார் முகமது, சண்முகநாதன், தாமோதரன், கந்தசாமி, மூர்த்தி, சிவராஜ் ஆகியோர்கமிஷனரை சந்தித்தனர். கோரிக்கைகளாவன 25 கிலோ எடைக்கு குறைவான அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான 5 சதவீத வரியை முழுமையாக நீக்க வேண்டும். நிலக்கடலை, செங்கல், கற்பூரம், உடனடி தயார் நிலை உணவு, தின்பண்டங்கள், நுாடுல்ஸ், வெண்ணெய், பிஸ்கெட், உலர் பழங்களுக்கு 5 சதவீத வரியாக குறைக்க வேண்டும். ரஸ்க், ஈர இட்லி மாவு, தோசை மாவு, வற்றல் வகைகளுக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும். உரம், பூச்சிக்கொல்லி மருந்து, நுண்ணுாட்ட உரங்களுக்கு 5 சதவீத வரி விதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.