உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / முடுவார்பட்டி குளம் பராமரிக்க கோரிக்கை

முடுவார்பட்டி குளம் பராமரிக்க கோரிக்கை

அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் ஒன்றியம் முடுவார்பட்டி ஊராட்சியில் கிராம நுழைவுப் பகுதியில் மெயின் ரோட்டில் மாவுத்தன் குளம் உள்ளது. இப்பகுதியின் நீர் ஆதாரமாக இருந்து வந்தது. பல ஆண்டுகளாக மழை நீருடன் கழிவுநீர் சேருமிட மாக மாறிவிட்டது. ஊர் குப்பை குளத்தின் ஒரு கரையில் மழை போல் குவிக்கப்பட்டுள்ளது. மயானத்தில் தண்ணீர் உள்ளிட்ட வசதிகள் இல்லை. இப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. குளத்தின் கரை புதர் மண்டி கிடக்கிறது. குளத்தை பராமரிப்பதோடு கரைகளில் நடைபாதை, பூங்கா அமைக்க ஊராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை