குடியிருப்போர் சங்கம் உதவி
மதுரை: மதுரை டி.வி.எஸ்., நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு டிரைசைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாநகராட்சி மண்டல 5 துணை கமிஷனர் பார்த்தசாரதி தலைமை வகித்தார்.கவுன்சிலர் போஸ் முன்னிலை வகித்தார். டிரைசைக்கிள்கள் வழங்கிய சண்முகப்பிரியா, சுப்ரமணியம், சங்க துணைத் தலைவர் முரளி, பொருளாளர் பாஸ்கர், நிர்வாகிகள் சிவசுப்ரமணியம், சண்முகம், பாரதிராஜ், ஹரி, ரவி, ஜோதி, குமார் பங்கேற்றனர்.