உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குடியிருப்போர் சங்கக் கூட்டம்

குடியிருப்போர் சங்கக் கூட்டம்

திருப்பரங்குன்றம் : மதுரை மாநகராட்சி திருப்பரங்குன்றம் ஐயப்பன்தாங்கல் குடியிருப்போர் நலச்சங்கக் கூட்டம் நடந்தது. சங்கத் துணைத் தலைவர் முகமது இஸ்மாயில் தலைமை வகித்தார். செயலாளர் எஸ்.மோகன், பொருளாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஐயப்பன்தாங்கல் பகுதிக்கு ரோடு வசதி ஏற்படுத்தித்தர வேண்டும். குடிநீர் குழாய் பதித்தும், பாதாள சாக்கடை வசதியை ஏற்படுத்தியும் தரவேண்டும். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்தவும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நிர்வாகிகள் கணேசன், விஜயகுமார், அருணோதயம், நாராயணசாமி, மகளிர் அமைப்பினர் ஈஸ்வரி, ஆதிரை, தனலட்சுமி, லாவண்யா, சுதா, விஜயராணி, இந்து, பொற்கொடி, தேவபாக்கியம், பாண்டியம்மாள், இந்திரா, மைதிலி, மெய்யம்மை உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ