மேலும் செய்திகள்
புத்தாக்க பயிற்சி
19-Mar-2025
மதுரை : கால்நடை பராமரிப்புத்துறை மதுரை மண்டல இணை இயக்குநர் சுப்பையன் பணி ஓய்வு பெறுவதை முன்னிட்டு பாராட்டு விழா தல்லாகுளம் கால்நடை பன்முக வளாகத்தில் நடந்தது. துணை இயக்குநர் நந்தகோபால், மருத்துவமனை உதவி இயக்குநர் சரவணன் முன்னிலை வகித்தனர். மதுரை, திருமங்கலம், கோட்ட உதவி இயக்குநர்கள் பழனிவேலு, சரவணன், முருகலட்சுமி, ஜோசப் அய்யாத்துரை, தவமணி, ராஜா, கால்நடை உதவி டாக்டர் சங்க மதுரை மாவட்ட செயலாளர் மணிகண்டன், கால்நடை ஆய்வாளர் சங்க மாவட்ட செயலாளர் பிரபாகரன், கால்நடை பராமரிப்பு உதவியாளர் முன்னேற்ற சங்க மாநிலத் தலைவர் ராஜசேகரன் பங்கேற்றனர். டாக்டர் சுரேஷ் நன்றி கூறினார்.
19-Mar-2025