உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதிப்பெண் பட்டியல்படி தாசில்தார் பதவி உயர்வு வருவாய் நேரடி நியமன அலுவலர்கள் வலியுறுத்தல்

மதிப்பெண் பட்டியல்படி தாசில்தார் பதவி உயர்வு வருவாய் நேரடி நியமன அலுவலர்கள் வலியுறுத்தல்

மதுரை: 'மதிப்பெண் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தாசில்தார் பதவி உயர்வு பட்டியலை வெளியிட்டால் நீதிமன்ற அவமதிப்பாகும்' என, தமிழ்நாடு வருவாய்த்துறை (குரூப் 2) நேரடி நியமன அலுவலர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் கண்ணன், நிர்வாகிகள் பிரதீபா, கார்த்திக் பாபு தெரிவித்துள்ளனர்.அவர்கள் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மதிப்பெண் அடிப்படையில் தாசில்தார் பதவி உயர்வு வழங்குமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதில் 2017 ம் ஆண்டு துணைத்தாசில்தார் பட்டியலுக்கு தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.ஆனால் தற்போது மாவட்ட கலெக்டர் 2017ம் ஆண்டு துணைத் தாசில்தார் பட்டியலின் அடிப்படையில் 2024 ம் ஆண்டுக்கான தாசில்தார் தற்காலிக பதவி உயர்வு பட்டியலை வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளார். இத்தேர்வில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மதிப்பெண் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும்.2017ம் ஆண்டு துணைத் தாசில்தார் பட்டியலில் பின்னடைவு காலிப்பணியிடங்களுக்கென துணைத் தாசில்தார் பணியிடங்களில் நேரடி நியமனம் பெற்றவர்களை முதலில் நிர்ணயம் செய்திருப்பது அரசு விதிகளுக்கு முரணானது. எனவே மதிப்பெண் அடிப்படையிலான பதவி உயர்வு வழங்கும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தாசில்தார் பதவி உயர்வு பட்டியல் வெளியிட்டால் நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாக நேரிடும் எனத் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி