பாலிதீன் பைக்கு மாற்று வழி வணிகர்களுக்கு பரிசுத்தொகை
மதுரை: தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகளை பயன்படுத்தாமல் 'மீண்டும் மஞ்சள் பை' திட்டத்தின் கீழ் மாற்று வழிகளை கடைபிடிக்கும் உணவு வணிகர்களுக்கு தமிழக அரசின் சார்பில் பரிசு, கேடயம் வழங்கப்பட உள்ளது. லைசென்ஸ் பெற்ற உணவு வணிகர் பாலிதீன் பையை பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.ஒரு லட்சம், பதிவுச்சான்றிதழ் (ஆர்.சி.,) பெற்ற உணவு வணிகருக்கு ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கப்படும். நடப்பாண்டில் லைசென்ஸ் இருக்க வேண்டும். அந்த உணவகத்தில் இருந்து ஒரு நபராவது உணவுப்பாதுகாப்புத்துறை நடத்திய 'பாஸ்டாக்' பயிற்சி பெற்றவராகவும், ஊழியர்கள் அனைவரும் மருத்துவச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் சுகாதார தணிக்கை மேற்கொண்டு சுகாதார மதிப்பீட்டு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். சிறப்புக் குழு அமைத்து உணவு வணிகர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அக்., 15க்குள் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: நியமன அலுவலர் அலுவலகம், உணவுப்பாதுகாப்புத்துறை, மாவட்ட சுகாதார அலுவலர் வளாகம், விஸ்வநாதபுரம், மதுரை, போன்: 0452 -- 264 0036.