உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தொடர் மழையால் மகிழும் நெல் விவசாயிகள்; கவலையில் காய்கறி சாகுபடியாளர்கள்

தொடர் மழையால் மகிழும் நெல் விவசாயிகள்; கவலையில் காய்கறி சாகுபடியாளர்கள்

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் வட்டார மானாவாரி பகுதிகளில் தொடர்ந்து சில நாட்களாக பெய்துவரும் மழையால் நெல் விவசாயிகள் மகிழ்ச்சியிலும், முருங்கை, காய்கறிகள் விவசாயிகள் கவலையிலும் உள்ளனர்.மானாவாரி பகுதிகளில் மிளகாய், தக்காளி, கத்தரி, வெண்டை, வெங்காயம் உள்ளிட்ட காய்கறி பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. பலர் முருங்கை, பருத்தியும் சாகுபடி செய்துள்ளனர். சமீபத்தில் பெய்துவரும் தொடர் மழையால் வயல்களில் தேங்கி நிற்கும் மழைநீரை விவசாயிகள் வெளியேற்றி வருகின்றனர்.விவசாயிகள் கூறுகையில், ''மானாவாரி பகுதி வயல்களில் மழைநீர் காய்கறி பயிர்களை சூழ்ந்து நிற்கிறது. இன்னும் சில தினங்கள் மழை தொடர்ந்தால் பயிர்கள் அழுகிவிடும். இதனால் வயல்களில் தேங்கிய தண்ணீரை வாய்க்கால் வெட்டி வெளியேற்றி வருகிறோம்.தற்போது பெய்யும் மழை நெல், வாழை, மரப்பயிர்கள், முற்றிய செடிகளுக்கும், உழவு செய்துள்ளவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. காய்கறி பயிர்கள், முருங்கை, பருத்திக்கு அவசியமற்றது. எனவே தொடர்ந்து மழை பெய்தால் காய்கறி சாகுபடி செய்துள்ளவர்கள் பாதிக்கப்படுவோம்'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ