உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சாலை பாதுகாப்பு விழா

சாலை பாதுகாப்பு விழா

மதுரை : சாலைப் பாதுகாப்பு மாதவிழாவையொட்டி மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரியில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. மத்திய ஆர்.டி.ஓ., அலுவலக ஆய்வாளர் மனோகர் தலைமை வகித்தார். அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி துணை மேலாளர் பூமிநாதன், பொறியாளர் ஜான், ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி பங்கேற்றனர்.யா. ஒத்தக்கடையில் போக்குவரத்து போலீசார் சார்பில் ஆட்டோக்கள் பேரணியாக சென்றன. ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடை அணிவது, அதிக பயணிகளை ஏற்றக் கூடாது, குடிபோதையில் வாகனம் ஓட்டக் கூடாது உள்ளிட்ட விதிமுறைகளை எடுத்துரைத்தனர். இன்ஸ்பெக்டர் கலையரசி, ஏட்டுக்கள் கற்பகராஜன், கவியரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !