உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரோடு பணி எம்.எல்.ஏ., ஆய்வு

ரோடு பணி எம்.எல்.ஏ., ஆய்வு

சோழவந்தான்: சோழவந்தான் அருகே வடகாடு பட்டி, விக்கிரமங்கலம் ரோடு அமைக்கும் பணியை வெங்கடேசன் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார். இங்கு விக்கிரமங்கலம், வடகாடுபட்டி இடையே 150 மீ., பகுதி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் பல ஆண்டுகளாக இப்பகுதியில் மட்டும் ரோடு அமைக்காமல் குண்டும், குழியுமாக இருந்தது. இந்நிலையில் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் சாக்கடை கால்வாய், பேவர் பிளாக், தார் ரோடு அமைக்க திட்டமிட்டு சில நாட்களுக்கு முன்பு வெங்கடேசன் எம்.எல்.ஏ., தலைமையில் பூமி பூஜை நடந்தது. பணிகள் தொடங்கிய நிலையில் வனத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பணிகள் முடங்கின. இதையடுத்து நேற்று அதிகாரிகளுடன் சென்ற எம்.எல்.ஏ., ஆய்வு செய்து பேச்சுவார்த்தை நடத்தி பணிகளைத் தொடங்கி வைத்தார். பி.டி.ஓ., க்கள் லட்சுமி காந்தம், கிருஷ்ணவேணி, ஊராட்சி செயலர் ஒய்யணன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை