மேலும் செய்திகள்
கால்வாயில் அடைப்பால் வீடுகளைச் சூழ்ந்த தண்ணீர்
26-Aug-2024
திருநகர்: மதுரை மாநகராட்சி 94 வது வார்டு திருநகர் பகுதிகளில் பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களில் வேர்கள் அதிகளவில் அடைப்பதால் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்களும், வேர்களை அகற்றுவதற்கு பணியாளர்களும் அவதிப்படுகின்றனர்.திருநகரில் அனைத்து தெருக்களிலும் குடிநீர் சப்ளை செய்வதற்காக பூமிக்கு அடியில் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் அனைத்து தெருக்களிலும் இருபுறமும் அதிகளவில் மரங்கள் உள்ளன.இந்த மரங்களின் வேர்கள் பூமிக்கு அடியில் உள்ள குடிநீர் பிளாஸ்டிக் குழாய்களின் இணைப்பு வழியாக குழாய்களுக்குள் செல்கின்றன. அவை அடர்ந்து வளர்ந்து தண்ணீர் செல்வதை அடைக்கிறது.இதனால் தண்ணீர் சப்ளை தடைபடுகிறது. பல இடங்களில் ஒருவாரமாக தண்ணீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர். தண்ணீர் சப்ளை இல்லாத பகுதிகளில் தோண்டி பார்த்தபோது குழாய்களுக்குள் ஆயிரக்கணக்கான வேர்கள் அடைத்து நிற்பது தெரியவருகிறது. தினமும் ஒரு பகுதியில் இப்பிரச்னை ஏற்படுகிறது. இதனால் பணியாளர்களும் தினம் அவதிக்குள்ளாகின்றனர்.முல்லைப் பெரியாறு திட்டத்திற்காக தற்போது அப்பகுதியில் புதிய தொழில்நுட்பத்தில் குழாய்கள் பதிக்கப்படுகிறது.இத்திட்டம் நிறைவேறும் பட்சத்தில் இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்படும். அதனால் முல்லைப் பெரியாறு திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்.
26-Aug-2024