சமயநல்லுாரில் ரவுடி தற்கொலை
வாடிப்பட்டி: சமயநல்லுார் அடுத்த டபேதார் சந்தை அம்பேத்கர் காலனியைச் சேர்ந்தவர் ரவுடி பிசிறு என்ற பிரபு 31. சமயநல்லுார் உள்ளிட்ட ஸ்டேஷன்களில் கொலை, கூட்டு பாலியல், வழிப்பறி உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. ஆட்டோ டிரைவராகவும் இருந்தார். மனைவி, இரு மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு மது குடிக்க பணம் கேட்டு மனைவியுடன் தகராறு செய்தார். தர மறுத்ததால் வீட்டின் அருகே மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். இன்ஸ்பெக்டர் கருப்புசாமி, எஸ்.ஐ.,க்கள் மாரியப்பன், ராஜா முகமது விசாரிக்கின்றனர்.