மேலும் செய்திகள்
ரூ. 75 லட்சம் தங்கம் ஏர்போர்டில் பறிமுதல்
08-Jan-2025
அவனியாபுரம்: இலங்கையில் இருந்து வந்த விமானத்தின் கழிவறையில் கிடந்த ரூ. 71.25 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை மதுரை சுங்கத்துறையினர் கைப்பற்றினர்.இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து நேற்று முன்தினம் மாலைஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மதுரை வந்தது. அந்த விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்க இலாகாவின் வான் நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை நுண்ணறிவு பிரிவினர் சோதனையிட்டனர். பயணிகளிடம் கடத்தல் தங்கம் எதுவும் இல்லை எனத் தெரிந்தது.பயணிகள் அனைவரும் வெளியில் சென்றதும் நுண்ணறிவு பிரிவினர் அந்த விமானத்தினுள் சோதனையிட்டனர். விமானத்தின் கழிவறையில் 950 கிராம் எடையில் 'பேஸ்ட்' வடிவிலான தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அதன் மதிப்பு ரூ. 71 லட்சத்து 25 ஆயிரம் ஆகும். தங்கத்தை கைப்பற்றிய சுங்க இலாகா வான் நுண்ணறி பிரிவினர் அந்த விமானத்தில் வந்த பயணிகளின் கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்கின்றனர்.
08-Jan-2025