உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / முனியாண்டி கோயிலில் சமபந்தி அசைவ விருந்து

முனியாண்டி கோயிலில் சமபந்தி அசைவ விருந்து

திருமங்கலம்: திருமங்கலம் எஸ். கோபாலபுரம் முனியாண்டி சுவாமி கோயிலில் பொங்கல் விழா நடந்தது .தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் ஸ்ரீ முனியாண்டி விலாஸ் என்ற பெயரில் அசைவ உணவகம் நடத்தி வருபவர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆண்டுதோறும் மூன்று நாட்கள் குடும்பத்துடன் இக்கிராமத்தில் ஒன்று கூடி திருவிழா கொண்டாடுவர்.நேற்று மாலை முனியாண்டி சுவாமிக்கு பெண்கள் மலர் தட்டுகளை தலையில் சுமந்து வந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தினர். அதனை தொடர்ந்து இரவில் 100 ஆடுகள், 300 சேவல்கள் மற்றும் 3000 கிலோ அரிசி கொண்டு அசைவ உணவு தயார் செய்து அங்கு வந்தவர்களுக்கு சமபந்தி அசைவ விருந்து வழங்கப்பட்டது.தலை குழம்பு, ஈரல் குழம்பு, கறிக் குழம்பு என விதவிதமான அசைவ குழம்பு தயாரித்து பக்தர்களை மகிழ்விக்கும் வண்ணம் சமபந்தி அசைவ உணவு அளித்து கோயில் சார்பில் பரிமாறப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை