மாதிரி கூட்டம்
மதுரை : கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சாத்தையாறு உப வடிநிலப்பகுதிக்குட்பட்ட அப்பன் திருப்பதி கால்நடை மருந்தகத்தில் மாதிரி கிராம ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது. மண்டல இணை இயக்குநர் நந்தகோபால், உதவி இயக்குநர் பழனிவேல் தலைமை வகித்தனர். வேளாண்மை, தோட்டக்கலை, நீர்வளத்துறை அலுவலர்கள் அரசின் திட்டங்களை மக்களுக்கு விளக்கினர். கால்நடை உதவி டாக்டர் பிரேமா, ஆய்வாளர் ஜெயந்தி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.