உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சாக்கடை கால்வாயில் விழுந்து துாய்மைப் பணியாளர் பலி

சாக்கடை கால்வாயில் விழுந்து துாய்மைப் பணியாளர் பலி

மதுரை: மதுரையில் சாக்கடை கால்வாயில் தவறி விழுந்ததில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு கோவில்பட்டி நகராட்சி துாய்மைப்பணியாளர் பேச்சிமுத்து 57, இறந்தார். துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து. அதன் நகராட்சி துாய்மைப்பணியாளராக இருந்தார். இவரது தம்பி மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவரிடம் நேரில் நலம் விசாரித்த பேச்சிமுத்து, இரவு 9:45 மணிக்கு மருத்துவமனை முன் சாக்கடை கால்வாய் தடுப்புச்சுவரில் அமர்ந்து அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது தவறி சாக்கடைக்குள் விழுந்தார். வாய், மூக்கில் சாக்கடை நீர் சென்ற நிலையில் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டனர். பின்னர் மருத்துவமனை கழிப்பறையில் குளித்துவிட்டு உறவினர்களுடன் ஊருக்கு பஸ்சில் திரும்பினார். அருப்புக்கோட்டை அருகே பேச்சிமுத்துவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்றுமுன்தினம் இறந்தார். சாக்கடை கால்வாயில் தவறி விழுந்ததால் உடல்நலம் பாதித்து இறந்ததாக போலீசில் அவரது மகன் சரவணன் புகார் அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ