உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மரக்கன்றுகள் இலவசம்

மரக்கன்றுகள் இலவசம்

மதுரை; ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் மதுரை மேற்கு ஒன்றியம் வெளிச்ச நத்தத்தில் பயனாளிகளுக்கு காய்கறி விதை, பழமரக்கன்றுகள், பயறுவகை விதை தொகுப்பு வழங்கும் விழா நடந்தது.கலெக்டர் பிரவீன்குமார் தலைமை வகித்தார். கலெக்டரின் பி.ஏ., சாந்தி, துணை இயக்குநர்கள் ராணி, பிரபா, மெர்ஸி ஜெயராணி, ஒழுங்குமுறை விற்பனைக்கூட செயலர் அம்சவேணி பங்கேற்றனர். மேற்கு வட்டார உதவி இயக்குநர் ஜனரஞ்சனி, தோட்டக்கலை அலுவலர்கள் ஏற்பாடு செய்தனர்.ஆதார் அட்டையுடன் வருவோருக்கு மதுரை தல்லாகுளத்தில் உள்ள உதவி இயக்குனர் அலுவலகத்தில் கத்தரி, தக்காளி, வெண்டை, கொத்தவரை, கீரை, மிளகாய் விதை பாக்கெட்கள், பப்பாளி, கொய்யா, அவரை பயறு விதைகள் இலவசமாக வழங்கப்படுகிறது. அல்லது tnhorticulture/tn/gov/in/tnhortnet இணையதளத்தில் பதிவு செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ