உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  சாத்தான்குளம் கொலை விசாரணை 3 மாதங்கள் கெடு: ஐகோர்ட் உத்தரவு

 சாத்தான்குளம் கொலை விசாரணை 3 மாதங்கள் கெடு: ஐகோர்ட் உத்தரவு

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையை கீழமை நீதிமன்றம், 3 மாதங்களில் முடிக்க, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. சாத்தான்குளத்தில் வியாபாரி ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார், 2020 ஜூன் 19ல் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கினர். இதில் கோவில்பட்டி கிளைச் சிறையில் இருவரும் இறந்தனர். சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், ஏட்டுக்கள் முருகன், சாமத்துரை, போலீஸ்காரர்கள் முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில்முத்து கைதாகினர். இவர்கள் மீது சி.பி.ஐ., கொலை வழக்கு பதிந்தது. ஜெயராஜ் மனைவி செல்வராணி, 'வழக்கில் தொடர்புடைய போலீசார் செல்வாக்கு மிக்கவர்கள். சாட்சிகளை மிரட்ட வாய்ப்புள்ளது. இது விசாரணையை பாதிக்கும். மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணையை விரைவுப்படுத்தி, குறிப்பிட்ட கால வரம்பில் முடிக்க உத்தரவிட வேண்டும்' என, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் விசாரணையை முடிக்க, நான்கு மாதங்கள் அவகாசம் கோரி கடிதம் அனுப்பியது. நீதிபதி கே.முரளிசங்கர், ''மதுரை கீழமை நீதிமன்றம் 3 மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும்,'' என, நேற்று உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ