உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சவுராஷ்டிரா கல்லுாரி ஹாக்கியில் சாம்பியன்

சவுராஷ்டிரா கல்லுாரி ஹாக்கியில் சாம்பியன்

திருப்பரங்குன்றம்: மதுரையில் நடந்த முதல்வர் கோப்பைக்கான ஹாக்கி போட்டிகளில் சவுராஷ்டிரா கல்லுாரி அணி சாம்பியன் பட்டம் வென்றது. நாக் அவுட் முறையில் நடந்த போட்டியில் 8 கல்லுாரி அணிகள் பங்கேற்றன. இறுதி ஆட்டத்தில் சவுராஷ்டிரா கல்லுாரி, அருளானந்தர் கல்லுாரி அணிகள் மோதின. இரு அணியும் தலா 2 கோல்கள் அடித்ததால் 'டை பிரேக்கர்' முறையில் சவுராஷ்ட்ரா கல்லுாரி அணி 7 - 6 என்ற கோல் வித்தியாசத்தில் வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. கல்லுாரிச் செயலாளர் குமரேஷ், நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன், கல்லுாரி முதல்வர் ஸ்ரீனிவாசன், விளையாட்டு குழு உறுப்பினர்கள் பேராசிரியர்கள் கணேசன், பாலாஜி, செந்தில், ஜீவப்பிரியா, விஷ்ணுபிரியா, டீன் ஜெயந்தி பரிசளிப்பில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி