தகுதியுள்ளோருக்கு உதவித்தொகை: அமைச்சர்
கொட்டாம்பட்டி : கொட்டாம்பட்டி பகுதியில் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் 10 ஊராட்சிகளின் 5114 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.இதில் பொறுப்பாளர் ஆனந்த் நகர் செயலாளர் முகமது யாசின், தொண்டரணி அமைப்பாளர் வேலாயுதம் கலந்து கொண்டனர். இதில் அமைச்சர் பேசியதாவது : தமிழகத்தில் ஒவ்வொரு திட்டம் மூலம் மக்களுக்கு பயன் உள்ள ஆட்சியினை முதலமைச்சர் ஸ்டாலின் செய்து வருகிறார். குறிப்பாக மகளிர்க்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறார். மகளிர்சுய உதவி குழு கடனை தள்ளுபடி செய்வதோடு அவற்றை திருப்பி வழங்கியுள்ளார். தகுதியுள்ள மகளிர் அனைவருக்கும் உதவித்தொகை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார்.