உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மத்திய கல்வி நிறுவனத்தில் சேரும் மாணவர்களுக்கு உதவித்தொகை

மத்திய கல்வி நிறுவனத்தில் சேரும் மாணவர்களுக்கு உதவித்தொகை

மதுரை: மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஐ.ஐ.ஐ.டி., என்.ஐ.டி., மற்றும் மத்திய பல்கலையில் பட்டம், பட்டமேற்படிப்பு பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் மாணவர்களுக்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்குள் இருந்தால் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். கற்பித்தல், சிறப்பு, தேர்வு, இதர கட்டணங்களுக்காக ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இக்கல்வியாண்டில் புதியவர்கள், புதுப்பித்தல் செய்ய உள்ளவர்கள் விண்ணப்பிக்க கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம். https://bcmbcmw.tn.gov.in/ welfschemes.htm# scholarshipschemes என்ற இணைய முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை தங்கள் கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்கள் சான்றொப்பத்துடன், தகுதியான விண்ணப்பத்தை பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலருக்கு அக்.31க்குள் அனுப்ப வேண்டும் என கலெக்டர் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை