உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பள்ளி, கல்லுாரி செய்திகள்

பள்ளி, கல்லுாரி செய்திகள்

மாணவிகள் தேர்வு வாடிப்பட்டி: அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் யோகா, முகேஸ்வரி, சோபிகா, லவனா முதல்வர் கோப்பை ஹாக்கி போட்டிக்கு விளையாட மதுரை மாவட்ட அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வான மாணவிகள், பயிற்சி அளித்த உடற்பயிற்சி ஆசிரியர்கள் சந்திரமோகன், பாண்டியம்மாள்,வனிதா ஆகியோரை எம்.எல்.ஏ.,வெங்கடேசன், தலைமை ஆசிரியர் திலகவதி, உதவி தலைமை ஆசிரியர் பிரேமா,ஆசிரியர்கள் பாராட்டினர். ரத்த தான முகாம் மதுரை: அமெரிக்கன் கல்லுாரியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் முதல்வர் பால் ஜெயகர் தலைமையில் ரத்த தானம் முகாம் நடந்தது. அரசு மருத்துவமனை டீன் அருள் சுந்தரேஷ் குமார் துவக்கி வைத்தார். துணை முதல்வர் சாமுவேல் அன்புசெல்வன் உள்ளிட்டோர் பேசினர். 550 யூனிட் ரத்தம் ரத்த வங்கிக்கு தானமாக வழங்கப்பட்டது. நிதி காப்பாளர் பியூலா ரூபி கமலம், மதுரை காமராஜ் பல்கலை என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் பாண்டி, கல்லுாரி திட்டஒருங்கிணைப்பாளர் செல்வன், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். உலக ஓசோன் தின விழா மதுரை: டி.கல்லுப்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை, திருமங்கலம் கிரீன் டிரஸ்ட் சார்பில் உலக ஓசோன் தினவிழா கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியர் ராஜா தலைமை வகித்தார். சுற்றுச்சூழல் திட்ட ஒருங்கிணைப்பாளர் குழந்தைவேல் பேசினார். வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. தேசிய பசுமை படை மாணவர்கள் சார்பில் ஓசோன் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. உதவி தலைமையாசிரியர் காளிமுத்து, ஆசிரியர்கள் பங்கேற்றனர். தேசிய பசுமைப்படை ஆசிரியர் அழகேசன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை