உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பள்ளி, கல்லுாரி செய்திகள்...

பள்ளி, கல்லுாரி செய்திகள்...

கல்லுாரியில் கலைத் திருவிழா திருமங்கலம்: கப்பலுார் அரசு கலைக் கல்லுாரியில் கல்லுாரி கலைத் திருவிழா முதல்வர் சிங்காரவேலன் தலைமையில் நடந்தது. உதவிப் பேராசிரியர் ஷீலா ராணி வரவேற்றார். கணிதத் துறைத் தலைவர் ஹரிநாராயணன், வணிகவியல் துறைத் தலைவர் சின்னச்சாமி பேசினர். மாணவர்கள் சந்தோஷ் குமார் , தேன்மொழி தொகுத்து வழங்கினர். கலை நிகழ்ச்சிகள் நடந்தன. போட்டிகளுக்கு மீனாட்சி கல்லுாரி, விவேகானந்தா கல்லுாரி, செந்தமிழ் கல்லுாரி, மேலுார் அரசு கல்லுாரி, கருமாத்துார் அருளானந்தர் கல்லுாரி பேராசிரியர்கள் நடுவர்களாக இருந்தனர். ஏற்பாடுகளை கல்லுாரி பேராசிரியர்கள் சுமதி, சிவச்சந்திரன், மீனா செய்திருந்தனர். கல்வி உதவி வழங்கல் மதுரை: டி.கல்லுப்பட்டி மகேஸ்வரி மகன் ஜோதிராகவ். மதுரை ஒத்தக்கடை வேளாண் கல்லுாரி மாணவரான இவர் வறுமையால் கல்லுாரி கட்டணம் கட்டுவதற்கு வழியின்றி தவித்தார். இவருக்கு டி.கல்லுப்பட்டி நண்பர்கள் வட்டாரம் உதவ முன்வந்தது ஒவ்வொரு செமஸ்டர் துவங்குகையிலும் கட்டணம் செலுத்தினர். இந்தாண்டும் 5வது செமஸ்டர் கட்டணத்தை சென்னை மணலி பெரியசாமி, திருமங்கலம் விஜயலட்சுமி மற்றும் நண்பர்கள் வட்டாரம் அமைப்பினர் இணைந்து ரூ.18 ஆயிரத்து 500 ஐ அமைப்பின் தலைவர் பாஸ்கரன், பொதுச் செயலாளர் விஜயபார்த்திபன் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை