பள்ளி, கல்லுாரி செய்திகள்
அறிவியல் கண்காட்சி சோழவந்தான்: திருவேடகம் விவேகானந்தா கல்லுாரியில் கிராமப்புற மாணவருக்கான அறிவியல் கண்காட்சி நடந்தது. ஒருங்கிணைப்பாளர் சேர்வார முத்து வரவேற்றார். கல்லுாரி முதல்வர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். ராமகிருஷ்ண தபோவன துணைத் தலைவர் சுவாமி நியமானந்த, கல்லுாரிச் செயலர் சுவாமி வேதானந்த, குலபதி சுவாமி அத்யாத்மானந்த ஆசியுரை வழங்கினர். காந்திகிராம பல்கலை பேராசிரியர் முரளிதரன் துவக்கி வைத்தார். துணை முதல்வர் சந்திரசேகரன் நன்றி கூறினார். கல்லுாரி, பள்ளி மாணவர்கள் சார்பாக அறிவியல் நிகழ்வுகளை வெளிப்படுத்தும் பொருட்டு செய்முறை, மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டன மதுரை மாவட்டத்தின் 21 மேல்நிலைப்பள்ளிகளின் மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். வரலாற்றுத் துறை தலைவர் குமரேசன் தொகுத்து வழங்கினார். கலை விழா போட்டிகள் மதுரை: பாத்திமா கல்லுாரியில் தமிழ் உயராய்வு மையம் சார்பில் கல்லுாரிகளுக்கு இடையேயான கலை விழா போட்டிகள் நடந்தன. மைய இணைப் பேராசிரியை அருள் மைக்கேல் செல்வி வரவேற்றார். துறைத் தலைவர் டயானா கிறிஸ்டி போட்டிகள் நோக்கம் குறித்து பேசினார். கிறிஸ்தவ ஆய்வு மைய பாதிரியார் மணிவளன் சிறப்புரையாற்றினார். பல்வேறு போட்டிகளில் அமெரிக்கன் கல்லுாரி முதல் பரிசும், காந்தி கிராம பல்கலை 2ம் பரிசும் வென்றது. மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. உதவிப்பேராசிரியை அன்புராணி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இணைப் பேராசிரியைகள் ஏஞ்சல், லயோலா ஜூலியட் மேரி ஒருங்கிணைத்தனர். மாணவிகள், ஆய்வாளர்கள் பங்கேற்றனர். ஆய்வு மாணவி ஆண்டாள் நன்றி கூறினார். கலந்துரையாடல் மதுரை: கோ.புதுார் அல்அமீன் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் கலந்துரையாடல் நடந்தது. தலைமை ஆசிரியர் ஷேக் நபி தலைமை வகித்தார். மதுரை வாசகர் வட்டத் தலைவர் சண்முகவேல் முன்னிலை வகித்தார். செயலாளர் ராமமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நாமும் நுாலும் நுாலகமும் என்ற தலைப்பில் பேசினார். மாணவர்கள் தங்கள் ஓய்வு நேரத்தை நுால்கள் படித்து பயனுள்ளவாறு செலவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தமிழ் ஆசிரியர் தவுபிக் ராஜா நன்றி கூறினார். உதவி தலைமை ஆசிரியர்கள் ஜாகீர் உசைன், அல்ஹாஜ் முகமது பங்கேற்றனர். குடிநீர் இயந்திரம் வழங்கல் திருமங்கலம்: விருதுநகர் காமராஜ் பொறியியல் கல்லுாரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் கள்ளிக்குடி எஸ்.பி., நத்தம் கிராமத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அங்குள்ள நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க சுத்திகரிக்கும் இயந்திரம் வழங்கப்பட்டது. கல்லுாரிச் செயலாளர் மகேஷ் குமார் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் செந்தில் முன்னிலை வகித்தார். விருதுநகர் இ-லைப் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனர் சிவசங்கர் குடிநீர் இயந்திரத்தை தொடங்கி வைத்தார். பனைவிதை, மரக்கன்று நடுதல் மதுரை: சம்மட்டிபுரம் பிள்ளைமார் சங்க மேல்நிலைப் பள்ளியில்பனைவிதை, மரக்கன்று நடும் விழா நடந்தது. நிர்வாக குழுத் தலைவர் சண்முகவேல் தலைமை வகித்தார்.ஆசிரியர் ரம்யாலட்சுமி வரவேற்றார். வன ரேஞ்சர்கள் ஸ்ரீதரன், மூர்த்தி, ஜான்மோன், கார்த்தி மரக்கன்றுகளை நட்டனர். பனைவிதைகளை பார்வை பவுண்டேசன் சோழன் குபேந்திரன் வழங்கி, பனைமரத்தின் சிறப்புகள் பற்றி விளக்கினார். துணைத் தலைவர் செல்வமணி, செயலாளர் முருகன், துணைச் செயலாளர் பழனி, பொருளாளர் கல்யாண சுந்தரம் பங்கேற்றனர். அரசு வனத்துறை மற்றும் பார்வை பவுண்டேசன் ஏற்பாடு செய்தனர்.