உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  பள்ளி ஆண்டு விழா

 பள்ளி ஆண்டு விழா

மதுரை: மதுரை ஏ.பி.டி. துரைராஜ் மேல்நிலைப் பள்ளியில் 43வது ஆண்டுவிழா பாலையம்பட்டி நாடார்கள் உறவின்முறைத் தலைவர் முருகேசன் தலைமையில் நடந்தது. தாளாளர் விசாகன் வரவேற்றார். தலைமையாசிரியர் ஜான்கண்ணன் அண்டறிக்கை வாசித்தார். அரசு மருத்துவமனை முன்னாள் டீன் ரத்தினவேல் மாணவர்களை வாழ்த்திப் பேசி பரிசு வழங்கினார். பிரைமரி பள்ளித் தாளாளர் ரமேஷ்பாபு, பொருளாளர் ஆனந்தவேலன் பேசினர். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. உறவின்முறை கல்விக் குழு உறுப்பினர் வெற்றிவேல், முத்துசாமி பெண்கள் மேல்நிலைப் பள்ளி தாளாளர் ராதிகா, ஆசிரியர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர். ஆசிரியர் சகாயராஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ