மேலும் செய்திகள்
முதலாம் ஆண்டு துவக்க விழா
14-Sep-2024
திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் தமிழ்நாடு வரலாற்று பேரவையின் 31வது மாநாடு 3 நாட்கள் நடந்தது. மத்திய தொல்லியல் துறை இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணன், வரலாற்று ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., உள்ளிட்டோர் பங்கேற்றனர். 450 பேர் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். நிறைவு விழாவிற்கு கல்லுாரி தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். செயலாளர் விஜயராகவன், பொருளாளர் ஆழ்வார்சாமி, உதவி செயலாளர் ராஜேந்திரபாபு, துணைத் தலைவர் ஜெயராம் முன்னிலை வகித்தனர். முதல்வர் ராமசுப்பையா வரவேற்றார். பேரவை பொதுச் செயலாளர் சுந்தரம் பேசினார். மாநாட்டின் தலைவர் வெங்கட்ராமன், கல்லுாரி வரலாற்று துறை தலைவர் உமா, பேராசிரியர்கள் பிறையா, ராஜகோபால் கலந்து கொண்டனர். விழிப்புணர்வு கருத்தரங்கு
திருப்பாலை: யாதவர் கல்லுாரியில் என்.எஸ்.எஸ்., சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. முதல்வர் ராஜூ தலைமை வகித்தார். என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் வீரபாண்டியன் வரவேற்றார். முன்னாள் செயலாளர் கண்ணன் விழிப்புணர்வு குறித்து பேசினார். சமூக செயல்பாட்டாளர் பாலு, எய்ட்ஸ் தொற்று ஏற்படுவது, தடுக்கும் வழிகள், வரும்முன் காக்கும் நடவடிக்கை குறித்தும், மாணவர்களின் சந்தேகங்களுக்கும் விடையளித்தார். செயலாளர் கண்ணன், தலைவர் ஜெயராமன், பொருளாளர் கிருஷ்ணவேல், இணைச்செயலாளர் முத்துக்கிருஷ்ணன், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மணிச்செல்வன், செந்தில், பாலகிருஷ்ணன், கோபால், சேகர், சுயநிதிப்பிரிவு இயக்குனர் ராஜகோபால் பேசினர். திட்ட அலுவலர் கோதைச்செல்வி நன்றி கூறினார். சர்வதேச கருத்தரங்கு
பெருங்குடி: சரஸ்வதி நாராயணன் கல்லுாரி வேதியியல் துறை சார்பில் 'வேதியல் மற்றும் ஆற்றலின் சமீபத்திய போக்குகள்' என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கு நடந்தது. முதல்வர் சந்திரன் தலைமை வகித்தார். துணை முதல்வர் கணேசன் முன்னிலை வகித்தார். துறைத் தலைவர் மோகன்தாஸ் வரவேற்றார். உதவிப் பேராசிரியர் அருண்குமார், ஸ்பெயின் கேடலோனியா ரசாயன ஆராய்ச்சி நிறுவன அறிவியல் அதிகாரி மேரி கியூரி பேசினார். இரண்டாம் நாள் கருத்தரங்கில் உதவிப் பேராசிரியர் கவுரி சங்கரி அறிமுக உரையாற்றினார். காந்திகிராம பல்கலை பேராசிரியர் காளிமுத்து பேசினார். 200க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் பங்கேற்றனர். தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் குபேந்திரன் நிறைவுரையாற்றினார். ஒருங்கிணைப்பாளர் சரவணகுமார் நன்றி கூறினார். பேராசிரியர்கள் பெருமாள், மணிவேல், முனியப்பன், தனலட்சுமி, ஷீலா ஏற்பாடுகள் செய்தனர். பல்திறன் போட்டிகள்
திருப்பரங்குன்றம்: சவுராஷ்டிரா கல்லுாரி ஹிந்தி துறை சார்பில் கல்லுாரிகளுக்கு இடையேயான பல்திறன் போட்டிகள் நடந்தன. செயலாளர் குமரேஷ் தலைமை வகித்தார். முதல்வர் ஸ்ரீனிவாசன், உள் தர உறுதி மைய ஒருங்கிணைப்பாளர் விஜய்குமார் முன்னிலை வகித்தனர். துறைத்தலைவர் ரோகிணி வரவேற்றார். கோவை கிருஷ்ணம்மாள் கல்லுாரி ஹிந்தி துறைத் தலைவர் பத்மாவதி பேசினார். பல்வேறு கல்லுாரிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். பேச்சு, பாட்டு, கவிதை, சுவரொட்டி தயாரித்தல், விளம்பரம், நடனம், பேஷன் அணிவகுப்பு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தன. லேடிடோக் கல்லுாரி சாம்பியன் பட்டம் வென்றது.
14-Sep-2024